பொதுப் போக்குவரத்தில் ஆசனங்களுக்கேற்ப மாத்திரம் பயணிகளை ஏற்றிச் செல்லமுடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், எந்தவொரு பயணியும் நின்றுகொண்டு பயணிக்க முடியாதென பொலிஸார் அறிவித்துள்ளனர்.
இதன்படி, குறித்த நடவடிக்கையானது, தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் உட்படுத்தப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளரான பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், குறித்த சட்டத்தை மீறி செயற்படும் பேருந்தின் சாரதி, நடத்துனர் மற்றும் பேருந்தின் உரிமையாளருக்கு எதிராக, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment