கொரோனா தடுப்பு மருந்து தொடர்பில் பிரதமரின் முக்கிய அறிவித்தல்!

உள்நாட்டில் தயாரிக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு மருந்துகளை, விஞ்ஞான ரீதியில் உறுதிப்படுத்த துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ அறிவுறுத்தியுள்ளார்.

பேராசியர் ஹர்ஷ சுபசிங்க மற்றும் இந்திக ஜாகொட ஆகியோர் இணைந்து கொரோனா தடுப்பு மருந்தொன்றை பரிந்துரைத்துள்ளனர்.

அத்துடன், கேகாலையைச் சேர்ந்த தம்மிக பண்டார என்பரினாலும், ஒரு வகை மருந்து தயாரிக்கப்பட்டுள்ளது.

மேலும், கொழும்பு பல்கலைக்கழகத்தினால் சுதேசிய மருத்துவ முறைமையொன்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையிலேயே, அவற்றை விஞ்ஞான ரீதியில் உறுதிப்படுத்த துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, தேசிய ஆராய்ச்சி மன்றத்திக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ அறிவுறுத்தியுள்ளார்.

இதேவேளை, உலகில் கொவிட்-19 தொடர்பில் கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசி வகைகள் குறித்து ஆராய்ந்து, அது தொடர்பிலான அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு இதற்கு முன்னர் ஶ்ரீபிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஶ்ரீதேசிய ஆராய்ச்சி மன்றத்துக்கு அறிவுறுத்தியிருந்தார்.

அதற்கமைய தயாரிக்கப்பட்ட அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு கொவிட்-19 இற்கு இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட சிறந்த மூன்று தடுப்பூசிகள் தொடர்பான சீ.டீ.ஏ. அறிக்கை, தேசிய ஆராய்ச்சி மன்றத்தினால் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னிஆராச்சியிடம் கையளிக்கப்பட்டடுள்ளதாக பிரதமர் ஊடகப் பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.