பொகவந்தலாவை பகுதியில் மேலும் 8 பேருக்கு நேற்றைய தினம் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
வட்டவளை ஆடைத்தொழிற்சாலையின் பணி புரியும் இருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து அவர்களுடன் தொடர்புடையவர்களுக்கு கடந்த 23 ஆம் திகதி பி சி ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில் குறித்த பி சி ஆர் முடிவுகளின் பிரகாரம் மேலும் 8 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொகவந்தலாவை பொதுசுகாதார பரிசோதகர் தெரிவிக்கின்றார்.
இதேவேளை, வெளி மாவட்டங்களில் இருந்து நுவரெலியா மாவட்டத்திற்குள் பிரவேசித்த 85 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அம்பகமுவ பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.
அம்பகமுவ பிரதேச செயலக பிரிவின் ஊடாக நுவரெலியா மாவட்டத்திற்குள் உட்பிரவேசிக்கும் பிரதான வீதியான அட்டன் – கொழும்பு மார்க்கத்தின் கலுகல பகுதியில் முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளின் ஊடாக குறித்த கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதேவேளை, பசறை, காவத்தை மற்றும் டெமேரியா பகுதியில் மேலும் இருவருக்கு நேற்றைய நாளில் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட இருவருடனும் நெருங்கிய தொடர்பைப் பேணிய நபர்கள் மற்றும் கொழும்பில் இருந்து வருகை தந்த நபர்கள் ஆகியோர் உள்ளடங்கிய 34 பேருக்கு PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
PCR பரிசோதனை முடிவுகளின் பிரகாரம் மேலும் இருவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
Post a Comment