கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் உயிரிழப்பு!

கொரோனா தொற்றுக்குள்ளான மற்றுமொருவர் உயிரிழந்துள்ளமை இன்று இரவு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி வெல்லம்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 45 வயதான ஆண் ஒருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த நபரின் மரணத்திற்கான காரணமாக கொவிட் நிமோனியா தாக்கம் மற்றும் சிறுநீரக நோய் தாக்கம் அதிகரித்தமை என அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 195 ஆக உயர்வடைந்துள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.