பொலன்னறுவை - கல்லெல்ல கொவிட் மத்திய நிலைத்தில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா தொற்றுறுதியான 5 சிறைக்கைதிகள் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.
இன்று அதிகாலை அவர்கள் தப்பி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர்களை தேடி தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
போதை பொருள் பழக்கம் உடைய 26, 27, 31, 36 மற்றும் 52 வயதுகளை உடைய ஐவரே இவ்வாறு தப்பியுள்ளனர்.
அவர்கள் தொடர்பான தகவல் கிடைக்கும் பட்சத்தில் பொலன்னறுவை காவல்துறை தலைமையகம் அல்லது 119 என்ற இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி அறிவிக்க முடியும் என காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன குறிப்பிட்டார்.
1 : நிமல் வசந்த - வயது 52 - அங்கம்பிட்டிய
2: சுமித் புஷ்பகுமார - வயது 36 - பொரள்ளஸ்ஸ
3: புத்திக விமலரத்ன - வயது 31
4: கவிந்து மதுசான் - வயது 27 - வென்னப்புவ
5: ஹரித்த கெலும் - வயது 26 - மாரவிள
Post a Comment