நேற்று அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் தொடர்பில் வெளியான செய்தி.

நாட்டில் நேற்றைய தினத்தில் மாத்திரம் 650 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் 638 பேர் பேலியகொடை கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் எனவும், 12 பேர் சிறைச்சாலைகளில் தொற்றுக்குள்ளானவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, பேலியகொடை, திவுலப்பிட்டிய மற்றும் சிறைச்சாலை கொரோனா கொத்தணிகளில் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 31 ஆயிரத்து 720 ஆக அதிகரித்துள்ளது.

இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 35 ஆயிரத்து 387 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், கொரோனா தொற்றுக்குள்ளான 8 ஆயிரத்து 874 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் 467 பேர் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் சிகிச்சைபெற்றுவந்த மேலும் 701 பேர் குணமடைந்து நேற்று வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 26 ஆயிரத்து 353 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.