கண்டி மாவட்டத்தில் நேற்று அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் தொடர்பில் வெளியான செய்தி.

கண்டி மாவட்டத்தில் நேற்று மாத்திரம் 37 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கண்டி மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய நேற்றைய தினம் 25 கொரோனா தொற்றாளர்கள் உடபலாத்தை(கம்பளை) பிரதேசத்திலிருந்து அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும் அக்குரணை பிரதேசத்திலிருந்து 5 பேரும், பூஜாபிடிய பகுதியிலிருந்து 2 பேரும், குருந்துவத்த பகுதியிலிருந்து 2 பேரும், பாததும்பரை பகுதியிலிருந்து 2 பேரும், ஹரிஸ்பதுப பகுதியிலிருந்து ஒருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கண்டி மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.

இதற்கமைய கண்டி மாவட்டத்தின் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 757 ஆக அதிகரித்துள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.