வாகன சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட எச்சரிக்கை!

குடிபோதை மற்றும் அதிக வேகத்தில் வாகனங்களை செலுத்தும் சாரதிகளைக் கைது செய்ய, நேற்று இரவு (18) முதல் நாடு முழுவதும் விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதன்படி, குறித்த நடவடிக்கைகளை, எதிர்வரும் ஜனவரி மாதம் ஐந்தாம் திகதி வரை முன்னெடுக்க எதிர்பார்ப்பதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.

போக்குவரத்துப் பிரிவு பொலிஸாரினால் மறு அறிவித்தல் வரை, அதிக வேகத்தில் வாகனத்தை செலுத்துதல், குடிபோதையில் வாகனங்களை செலுத்துதல் மற்றும் கவனயீனமாக போக்குவரத்து நடவடிக்கையில் ஈடுபடுவோரை கைது செய்ய விசேட நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளோம்.

இந்த நடவடிக்கையை ஜனவரி மாதம் ஐந்தாம் திகதி வரை முன்னெடுக்க நாம் எதிர்பார்க்கின்றோம்.விபத்துக்கள் ஏற்படுவதைக் குறைத்தல், வீதிப் பாதுகாப்பை உறுதிப்படுத்தல் என்பனவே இதன் பிரதான நோக்கமாகும்.

குடிபோதையில் வாகனங்களை செலுத்துவோரை அடையாளங் கண்டு கொள்ள, அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் தேவையான உபகரணங்கள் உள்ளன.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.