அம்பகமுவ – வட்டவளை பகுதியில் அமைந்துள்ள ஆடைத்தொழிற்சாலை ஒன்று கொரோனா தொற்று பரவல் அச்சநிலைமைக்காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
அம்பகமுவ பொது சுகாதார பரிசோதகர் காமதேவன் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
குறித்த தொழிற்சாலையில் தொழில் புரியும் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்பட்டுத்தப்பட்டுள்ளதை தொடர்ந்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ள்ட்டதாக அவர் தெரிவித்தார்.
வட்டவளை ஆடைத்தொழிற்சாலையில் பணிப்புரியும், இளைஞன் ஒருவர்ருக்கு கடந்த 14 ஆம் திகதி கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து, அவருடன் தொழில் புரிந்த 60 பேருக்கு PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், அதில் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, தொற்றுக்குள்ளான நபர்களுடன் தொடர்புடைய 200 பேர் வரையில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அம்பகமுவ பொது சுகாதார பரிசோதகர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், வட்டவளை ஆடைத்தொழிற்சாலையில் பணிப்புரியும், ஏனைய நபர்களுக்கும் PCR பரிசோதனைகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்க்பட்டுள்ளதாகவும் அம்பகமுவ பொது சுகாதார பரிசோதகர் காமதேவன் தெரிவித்துள்ளார்.
Post a Comment