கண்டி மாவட்டத்தில் இன்று பிற்பகல் 3.30 மணி வரை கடந்த 24 மணித்தியாலத்தில் 16 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கண்டி மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய ஆறு கொரோனா தொற்றாளர்கள் கண்டி நகர எல்லைக்குட்பட்ட பிரதேசத்திலிருந்து அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும் உடுநுவர பிரதேசத்திலிருந்து ஐந்து பேரும், பாததும்பரை பகுதியிலிருந்து இருவரும், உடபளாத்த (கம்பளை) பிரதேசத்திலிருந்து ஒருவரும், யடினுவர பிரதேசத்திலிருந்து ஒருவரும், மெததும்பர பிரதேசத்திலிருந்து ஒருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கண்டி மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.
இதற்கமைய கண்டி மாவட்டத்தின் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 923ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன் கண்டி மாவட்டத்தில் இதுவரை ஐந்து கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக கண்டி மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய கண்டி மாநகர சபைக்கு உற்பட்ட பகுதியிலிருந்து ஒருவரும், அக்குரணை பகுதியிலிருந்து 3 பேரும், கலஹா பகுதியிலிருந்து ஒருவருமே இவ்வாறு மரணித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
Post a Comment