மத்திய மாகாணத்தின் தற்போதைய கொரோனா நிலவரம்!

மத்திய மாகாணத்தில் கொவிட் 19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,400 ஐ கடந்துள்ளதாக, கொவிட் 19 ஒழிப்புக்கான தேசிய செயலணி தெரிவித்துள்ளது.

இன்று காலை வரை 1,421 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். புதிய தொற்றாளர்களாக 80 பேர் பதிவாகியுள்ளனர்.

மத்திய மாகாணத்தின் கண்டி மாவட்டத்திலேயே அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதற்கமைய இதுவரை 908 தொற்றாளர்கள் கண்டியில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும் 392 பேர் நுவரெலியாவிலும் மாத்தளையில் 121 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.