நாடளாவிய ரீதியில் ஊரடங்கா? – இராணுவத்தளபதி விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு…!

பண்டிகை காலத்தை முன்னிட்டு மிக நீண்ட விடுமுறைக்காலம் வருவதன் காரணமாக பொதுமக்களை மிகவும் அவதானமாக செயற்படுமாறு இராணுவத்தளபதி சவேந்திர சில்வா அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

மேல்மாகாணத்தில் கொரோனா தொற்று தொடர்ந்தும் அதிகரித்து வருவதன் காரணமாக இந்த காலப்பகுதியில் பொதுமக்கள் தமது வீடுகளிலேயே இருப்பது பாதுகாப்பானதாக அமையுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

நத்தார் பண்டிகை மற்றும் ஆண்டு பிறப்பு ஆகிய காலப்பகுதிகளில், பொதுமக்களை தமது வீடுகளிலேயே கொண்டாட்டங்களில் ஈடுப்படுமாறும் இராணுவத்தளபதி கேட்டுக்கொண்டுள்ளார்.

அத்துடன், தொற்று பரவல் அதிகரித்துள்ளதை கவனத்தில் கொண்டு பொதுமக்கள் வெளிப்பயணங்களை தவிர்த்து செயற்படுவது அவசியமாகுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, பண்டிகை காலத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தபடமாட்டாதெனவும் இராணுவத்தளபதி சவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.

இன்று நள்ளிரவு முதல் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு அமுல்படுத்தப்படவுள்ளதாக பல்வேறு சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகியிருந்தன.

இது தொடர்பாக விளக்கமளிக்கும் போதே இராணுவத்தளபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, இன்று நள்ளிரவு முதல் நாடளாவிய ரீதியில் தனிமைப்படுத்தல் ஊரடங்கை அமுல்படுத்த எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எதிர்பார்க்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், பயணகட்டுப்பாடுகளை விதிப்பதற்கு தற்போது வரையில் தீர்மானங்கள் மேற்கொள்ளப்படவில்லை எனவும் இராணுவத்தளபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.