ஜனாஸா எரிப்பு விவகாரம்; மாத இறுதிக்குள் சாதகமான முடிவு ஏற்படுமென நம்பிக்கை - நீதியமைச்சர்.

கொரோனா வைரஸால் மர ணிப்பவர்களை புதைக்கும் விவகாரத்திற்கு தீர்க்கமான முடிவு காணப்பட வேண்டு மென நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். 

காலி நீதிமன்ற கட்டடத் தொகுதி பணிகளை பார்வையிடுவதற்காக அமைச்சர் நேற்று காலிக்கு விஜயம் செய்திருந்தார். இதனை தொடர்ந்து கொரோனா பரவலினால் மரணிப்பவர்களின் சடலங்களை பாதுகாத்து வைக்கும் விடயம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் மேலும் கூறியதாவது, 

கொரோனா மாரணங்களை புதைப்பது தொடர்பில் மாறுபட்ட கருத்துகள் காணப்படுகின்றன. மருத்துவர்கள், நிபுணர்கள் போன்றோரின் கருத்தை பெற்று இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். 

இந்தப் பிரச்சினையை பேச் சுவார்த்தையூடான சாதகமான முடிவின் நிலைபாட்டிலேயே நான் இருக்கிறேன். 

கொரோனா பரவலினால் மரணிப்பவர்களின் சடலங்களை குளிர் அறைகளில் வைப்பது தொடர்பில் பிரச்சினையிருந்தால் சுகாதார அமைச்சு அது தொடர்பில் இது எதிர்காலத்தில் பேரழிவு தரும் விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் எச்சரித்துள்ளார். 

”சக்தி உதவியற்றது, ஆனால் பொறுமை முடிவுக்கு வரக்கூடிய ஒரு இடம் இருக்கிறது. இது வெறுப்பாக இருக்கக்கூடும். 

கொரோனா பரவலினால் உயிரிழப்பவர்களை அடக்கம் செய்ய உலகின் பிற நாடுகள் அனுமதித்துள்ளதாக எனவும், சுட்டிக்காட்டி யுள்ள அவர், மேலும் இலங்கையில் முஸ்லிம்களுக்கு இந்த விடயத்தில்  தடை விதிக்கப்படுவது பிரச்சினைக்கு வழிவகுக்கும் எனவும் கூறியுள்ளார்

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.