நாவலபிட்டிய பாடசாலை மாணவி ஒருவருக்கு கொரோனா!

நாவலபிட்டிய பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் 12 ஆம் ஆண்டில் கல்வி கற்று வந்த மாணவி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாவலபிட்டிய நகரில் கொரோனா தொற்றுக்குள்ளான நபருடன் தொடர்பில் இருந்த ஒருவரின் மகளே இவ்வாறு கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் குறித்த மாணவி பெனிதெனிய தனிமைப்படுத்தல் முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த மாணவியுடன் தொடர்பில் இருந்த 4 ஆசிரியர்கள் மற்றும் 16 மாணவிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.