பொலிஸார் பொதுமக்களுக்கு விடுத்துள்ள முக்கிய கோரிக்கை!

பொதுப் போக்குவரத்து பயணத்தின் போதும் மற்றும் வீட்டிலிருந்து வெளியே பயணிக்கும் போதும் பல காகித துண்டுகளில் பொதுமக்கள் தங்கள் பெயர், முகவரி மற்றும் தொலைப்பேசி இலக்கங்களைக் குறித்து வைத்திருக்குமாறு பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹன கோரிக்கை விடுத்துள்ளார்.

நத்தார் மற்றும் புதுவருடப்பிறப்பு பண்டிகையின் போது பொது மக்கள் சுகாதார வழிகாட்டிகளைப் பின் பற்ற வேண்டும்.

அத்துடன், கொரோனா தொற்றுநோய் பரவுவதைத் தடுப் பதில் ஈடுபட்டுள்ள சுகாதார அதிகாரிகள் அல்லது பாது காப்புப் பிரிவினர் கொரோனா தொற்று தொடர்பான தக வல்களைக் கேட்க்கும் போது மறுக்காது குறித்த சந்தர்ப் பத்தில் அனுசரணை வழங்குமாறு பொலிஸார் பொது மக்களிடம் கேட்டுள்ளனர்.

பொதுமக்கள் நோய்களைத் தடுக்கும் சட்டத்திற்குக் கட்டுப்பட்டுள்ளனர் என பொலிஸ் அஜித்ரோஹன தெரிவித்தார்.

அத்துடன், பொதுப் போக்குவரத்து பயணத்தின் போது மற்றும் வீட்டிலிருந்து வெளியே பயணிக்கும் போதும் பல காகித துண்டுகளில் பொதுமக்கள் தங்கள் பெயர், முக வரி,தேசிய அடையாள அட்டை எண் மற்றும் தொலைப் பேசி இலக்கங்களைக் குறித்து வைத்திருக்குமாறு அஜித்ரோஹன பொதுமக்களிடம் கோரிக்கை விடுத் துள்ளார் .

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.