கண்டி மாவட்டத்திற்கு உட்பட்ட மஹய்யாவ பகுதியில் பயணக்கட்டுப்பாடுகளை விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கண்டி மாநகர ஆணையாளர் அமில நவரத்ன இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த பகுதியில், 28 கொரோனா தொற்றாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளதையடுத்தே, இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவளை, கண்டி மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில், கொரோனா தொற்றுக்குள்ளான 40 பேர் நேற்றைய தினம் அடையாளங் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment