கொரோனா அச்சம் காரணமாக நாளை முதல் மேல் மாகாணத்தின் சில பகுதிகள் முடக்கப்படவுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி குறித்த பிரதேசங்கள் நாளை(07.12.2020) காலை 5.00 மணி முதல் முடக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில், கொழும்பு மாவட்டத்தின் உனுப்பிட்டிய கிராம சேவகர் பிரிவு, கொம்பனித்தெரு, கருவாத்தோட்டத்தின் 60வது வத்தை, வெள்ளவத்தை - கோகிலா வீதி ஆகிய பகுதிகளே இவ்வாறு நாளைய தினம் முதல் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் , கம்பஹா மாவட்டத்தின் ஹேக்கித்த, கெரவலப்பிட்டிய, குருந்துஹென, எவரிவத்தை, வெலிகலமுல்ல ஆகிய பகுதிகளும் நாளை(07.12.2020) காலை 5.00 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக குறித்த திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment