நாட்டில் இதுவரை 26 ஆயிரத்து 38 பேர் கொரோனா வைரசால் பீடிக்கப்பட்டுள்ளனர்.
6 ஆயிரத்து 877 கொவிட் 19 நோயாளர்கள் சிகிச்சை மையங்களில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அத்துடன் நாட்டில் கொவிட்19 நோயில் இருந்து மேலும் 728 பேர் நேற்று குணமடைந்தனர்.
தொற்றுநொயியல் விஞ்ஞானப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
இதன்படி நாட்டில் கொவிட்19 தொற்றுக்கு உள்ளாகி இருந்தவர்களில் 19 ஆயிரத்து 32 பேர் இதுவரையில் குணமடைந்துள்ளனர்.
கொவிட்19 காரணமாக நேற்று 5 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.
இதன்படி நாட்டில் கொவிட்-19 நோயால் இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 129 ஆக அதிகரித்துள்ளது
கொலன்னாவை பகுதியை சேர்ந்த 56 வயதுடைய பெண் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த மாதம் 28 ஆம் திகதி உயிரிழந்தார்.
இருதய நோய், நீரிழிவு மற்றும் கொவிட்19 தொற்று தீவிரமடைந்தமையே அவரது மரணத்திற்கான காரணம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் , கொழும்பு - 12 பகுதியைச் சேர்ந்த 89 வயதுடைய ஆண் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்தார்.
அவரது மரணத்திற்கான காரணம் , கொவிட்19 தொற்று , உயர் குருதி அழுத்தத்துடனான மூளையின் உட்பரப்பில் ஏற்பட்ட இரத்த கசிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கொழும்பு 10 ஐ சேர்ந்த 85 வயதுடைய ஆண் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கடந்த மாதம் 30 ஆம் திகதி அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்தார்.
கொவிட்19 நோயுடன் பக்றீரியா தொற்று அதிகரித்தமை அவரது உயிரிழப்புக்கான காரணமாகும் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
Post a Comment