கொரோனாவினால் உயிரிழந்தவரின் ஜனாஸாவை எரிக்க நீதிமன்றம் தடையுத்தரவு!

கொரோனா தொற்றினால் உயிரழிந்தவர்களின் உடல்களை தகனம் செய்வதை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு காலி நீதவான் நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.

காலி பகுதியைச் சேர்ந்த 84 வயதான முஸ்லீம் நபர் ஒருவரின் சடலம் தொடர்பில் உறவினர்கள் தொடர்ந்த வழக்கிற்கமையவே காலி நீதவான் நீதிமன்றத்தினால் இந்த இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமது உறவினரின் சடலத்தின் இறுதிச் சடங்குகள் தொடர்பில் அரசாங்கம் இறுதி தீர்மானத்தை மேற்கொள்ளளும் வரை தகனம் செய்யக்கூடாது என மனுவினூடாக குறித்த நபரின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். 

இதனடிப்படையில், கொவிட் மரணங்கள் தொடர்பில் அரசாங்கம் இறுதி தீர்மானம் ஒன்றை மேற்கொள்ளும் வரை குறித்த நபரின் சடலம் எரிக்குகூடாது என காலிநீதவான் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, அரசாங்கம் கொவிட் மரணங்கள் தொடர்பில் இறுதி தீர்மானத்தை எட்டும் வரையில் முஸ்லீம்களின் சடலங்கள் குளிரூட்டப்பட்ட 5 கொள்கலன்களில் பாதுகாத்து வைக்குமாறு நீதி அமைச்சர் அலிசப்ரி சுகாதார அமைச்சிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

இது தொடர்பாக ஆவணங்கள் காலி நீதவான் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.