இன்றும் நாட்டின் பல பாகங்களிலும் இடியுடன் கூடிய மழை பொழிய கூடும்..!

நாட்டின் சில பகுதிகளில் இன்று 100 மில்லிமீற்றர் வரையில் மழைவீழ்ச்சி பதிவாகுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள வானிலை அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும் அநுராதபுரம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இன்று மழையுடனான வானிலை நிலவும்.

சப்ரகமுவ, மத்திய, மேல், ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் மாலை வேளைகளில் மழையுடனான வானிலை நிலவக்கூடுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

சில பகுதிகளில் 100 மில்லிமீற்றர் வரையில் மழைவீழ்ச்சி பதிவாகுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.