இலங்கையில் மேலும் 6 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.
கொழும்பு 14 பிரதேசத்தை சேர்ந்த 39 வயதுடைய பெண் ஒருவரும், வீரகுல பிரசேத்தை சேர்ந்த 68 வயதுடைய ஆண் ஒருவரும், கொழும்பு 15 பிரதேசத்தை சேர்ந்த 77 வயதுடைய ஆண் ஒருவரும், கொழும்பு 10 பிரதேசத்தை சேர்ந்த 76 வயதுடைய ஆண் ஒருவரும் கிரிவத்துடுவ பிரதேசத்தை சேர்ந்த 88 வயதுடைய பெண் ஒருவரும் மற்றும் பண்டாரகம பிரதேசத்தை சேர்ந்த 83 வயதுடைய பெண் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இதற்கமைய இதுவரை நாட்டில் 171 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை நாட்டில் மேலும் 123 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த அனைவரும் பேலியகொடை கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
அதனடிப்படையில் இன்றைய தினம் இதுவரையில் 618 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர்.
இதற்கமைய, மினுவங்கொடை மற்றும் சிறைச்சாலை கொவிட் கொத்தணியில் மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 32,998 ஆக அதிகரித்துள்ளது.
Post a Comment