கொரோனா வைரஸ் தாக்கத்தின் 2ஆவது அலைமூலம் கடந்த ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் நேற்றுவரை மத்திய மாகாணத்தில் ஆயிரத்து 320 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.
மினுவாங்கொட மற்றும் பேலியகொட கொத்தணிகள் மூலமே இவர்களுக்கு இவ்வாறு வைரஸ் பரவியது.
நுவரெலியா மாவட்டத்தில் நேற்று மாத்திரம் 06 பேருக்கு வைரஸ் தொற்றியது. அம்மாவட்டத்தில் நேற்றுவரை 224 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கண்டி மாவட்டத்தில் கடந்த ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் நேற்றுவரை 1,033 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.
மாத்தளை மாவட்டத்தில் 63 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
Post a Comment