கொரோனா வைரஸினால் உயிரிழப்பவர்களின் உடல்களை மாலைதீவு புதைக்க முடியும் என்றால், ஏன் இலங்கையில் முடியாது என நீதியமைச்சர் அலிசப்ரி கேள்வி எழுப்பியுள்ளார்.
சமூக வலைத்தளமொன்றில் இயங்கிவரும் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அமைச்சர் இந்தக் கருத்துக்களைக் கூறியுள்ளார்.
கொரோனா ஜனாஸாக்களை அடக்கம் செய்வதன் ஊடாக தொற்று பரவாது என்பதை தொற்றுநோய் மற்றும் வைரஸ் குறித்த பிரபல்யம்வாய்ந்த பேராசிரியர் மலித் பீரிஸ் குறிப்பிட்டிருப்பதாகவும் நீதியமைச்சர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன் இப்படியான நிலைமையில், கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்ய அனுமதிக்காவிட்டால் பாரிய பிரச்சினைகள் உருவெடுக்கும் எனவும் குறிப்பிட்ட அவர், அது முஸ்லிம் இளைஞர்களை ஆயுதமேந்தவும் வைத்துவிடலாம் என்றும் இதன்போது எச்சரித்தார்.
Post a Comment