கண்டி மாவட்டத்தில் அதிகரிக்கும் கொரோனாவின் தற்போதைய நிலவரம்.

கண்டி மாவட்டத்தின் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1003 ஆக உயர்வடைந்துள்ளது.

நேற்று மொத்தமாக 12 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். 

அக்குரணை - 3, பூஜாப்பிட்டிய - 3, ஹரிஸ்பத்துவ - 2, ஹதரலியத்த - 1, பாததும்பரை - 3

அக்குரணை பிரதேசத்தில் 280 தொற்றாளர்கள் இனங்காணபட்டிருப்பதுடன் அதிகூடிய தொற்றாளர்களை கொண்ட பிரதேசமாக கண்டி மாவட்டத்தில் பதிவாகியுள்ளது.

கண்டி மாநகர சபை பிரதேசத்தில் மொத்தமாக 208 கொரோனா தொற்றாளர்களும் பாததும்பர பிரதேச சபை பிரிவில் 69 கொரோனா தொற்றாளர்களும், கம்பளை உடபலாத பிரதேசத்தில் 78 தொற்றாளர்களும், குண்டசாலை பிரதேசத்தில் 65 தொற்றாளர்களும் இது வரை இனங்காணப்பட்டுள்ளனர்.

மேலும் இதுவரை 5 கொரோனா மரணங்களும் பதிவாகியுள்ளன. அக்குரணையில் 3 மரணங்களும், கலஹா மற்றும் கண்டி மாநகர சபை பிரிவுகளில் தலா ஒரு மரணமும் இதுவரை பதிவாகியுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.