Pfizer மற்றும் BioNTech நிறுவனங்கள் இணைந்து உருவாக்கிய கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கு பிரித்தானியா அனுமதி வழங்கியுள்ளது.
இதன்மூலம், குறித்த தடுப்பூசியை பொதுமக்கள் பாவனைக்காக அனுமதி வழங்கிய முதல் நாடாக பிரித்தானியா இடம்பெற்றுள்ளது.
இந்த தடுப்பூசியானது கொரோனா வைரஸ் நோயில் இருந்து 95 வீத பாதுகாப்பை வழங்குவதாக பிரித்தானிய மருந்து கட்டுப்பாட்டு நிறுவனமான MHRA தெரிவித்துள்ளது.
அத்துடன், இதனை அடுத்த வாரம் முதல் பொதுமக்களுக்கு வழங்க முடியும் என MHRA குறிப்பிட்டுள்ளது.
Post a Comment