முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு.

மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளைத் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் உள்ள சகல அரபுக் கல்லூரிகளையும் கடும் நிபந்தனைகளுடன் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை(15) முதல் திறப்பதற்கு அனுமதி வழங்கப்படுவதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்வரும் நிபந்தனைகளுடன் அரபுக் கல்லூரிகள் திறக்க அனுமதி:

1. மேல் மாகாணம் மற்றும் முடக்கப்பட்ட பகுதிகளில் தொடர்ந்தும் அரபுக் கல்லூரிகள் மூடப்பட்டிருக்கும்.

2. சகல அரபுக் கல்லூரிகளதும் விடுதிகள் தொடர்ந்தும் மூடப்பட்டிருக்கும்.

3. உள்ளூர் மாணவர்கள் வீட்டிலிருந்து வந்து அரபுக் கல்லூரி வகுப்புகளில் பங்கு பற்ற மாத்திரம் அனுமதி

4. மேல் மாகாணம் மற்றும் முடக்கப்பட்ட பகுதிகளைக் சேர்ந்த அதிபர், ஆசிரியர் மற்றும் ஏனைய ஊழியர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

5. PHI இன் அனுமதியைப் பெற்று திணைக்கனத்தின் கள உத்தியோகத்தருக்கு வழங்கிய பின்னரே அரபுக் கல்லூரிகள் திறக்கப்பட முடியும்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.