உயர் நீதிமன்ற தீ விபத்து தொடர்பில் நீதி அமைச்சு வெளியிட்டுள்ள செய்தி

இன்று மாலை 4.45 மணியளவில் கொழும்பு உயர் நீதிமன்றம் அமைந்துள்ள கட்டிட வளாகத்தில் சிதைவுற்ற பொருட்கள் களஞ்சியசாலையில் தீ ஏற்பட்டுள்ளதாகவும், இந்த தீயினால் உயர் நீதிமன்றத்தின் எந்தவொரு அலுவலகத்திற்கு அல்லது கோப்புகள் உள்ளிட்ட எந்தவொரு பொருட்களுக்கும் பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் நீதி அமைச்சின் செயலாளர் எம்.எம்.பீ.கே மாயாதுன்ன தெரிவித்துள்ளார்.

அறிக்கை ஒன்றை வௌியிட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இந்த சிதைவுற்ற பொருட்கள் களஞ்சியசாலை உயர் நீதிமன்றம் அமைந்துள்ள பிரதான கட்டிடத்தின் பின்புறத்தில் அமைந்துள்ள கட்டிடத்தின் தரைத் தளத்தில் இருந்ததாகவும் இதற்கமைவாக இந்த தீயின் மூலம் பாதிக்கப்பட்டமை சிதைவுற்ற பொருட்கள் களஞ்சியசாலை மாத்திரமேயாகும் என்றும் அமைச்சின் செயலாளர் மேலும் கூறினார்.

இதே போன்று இந்த தீ தற்பொழுது முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தீ ஏற்படுவதற்கான காரணம் வெளியாகவில்லை என்பதுடன் இது தொடர்பில் விரைவாக விசாரணைகளை மேற்கொள்ளும் நடவடிக்கை தற்பொழுது குற்றப்புலனாய்வு திணைக்களம் மற்றும் அரசாங்கத்தின் இரசாயன பரிசோதனை திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாக அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.