சுகாதாரத் துறையினர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி மத்திய மாகாணத்தில் (5.12.2020) இதுவரை 424 கொவிட்-19 தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ளர்.
இதில் ஆகக் கூடுதலானவர்கள் கண்டி மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர். அத்தொகை 359 ஆகும். அதேநேரம் நுவரெலியா மாவட்டத்தில் 172 பேர் பதிவாகியுள்ளனர். மாத்தளை மாவட்டத்தில் 53 பேர் பதிவாகியுள்ளர்.
கண்டி மாவட்டத்தைப் பொறுத்தவரை சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவு ரீதியாக அக்குறணை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இதுவரை 94 பேர் இனம் காணப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்த படியாக கண்டி மாநகர சபைப்பிரிவில் 68 பேர் இனம் காணப்பட்டுள்ளனர்.
ஏனைய சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகள் அனைத்திலும் 50 ற்கும் குறைவான எண்ணிக்கையே பதிவாகியுள்ளன.
அதில் பாத்ததும்பறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 28 பேர் இனம் காணப்பட்டுள்ளளர். ஹாரிஸ்பத்துவ சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 18 பேரும் பதிவாகியுள்ளனர். யடிநுவர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 17 பேரும் பதிவாகியுள்ளனர்.
மெததும்பறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 16 பேரும், கம்பளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 15 பேரும் ஹத்தரலியத்தை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 12 பேரும் பதிவாகியுள்ளனர்.
ஏனைய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் 10 லும் குறைவாகவர்களே பதிவாகியுள்ளனர்.
இதேவேளை கண்டி மாவட்டத்தில் நேற்றைய தினம் 170 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment