தடுப்பூசி தொடர்பில் வெளியான முக்கிய தகவல்!

கொரோனா தொற்றுக்கான தடுப்பூசி அடுத்த வருடம் நடுப்பகுதியில் நாட்டுக்கு கொண்டுவரப்படுமென சுகாதார அமைச்சின் சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் சுசி பெரேரா தெரிவித்துள்ளார்.

பெரும்பான்மை ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இருந்தும், உரிய நிகி வழங்கி தடுப்பூசிகளை கொள்வனவு செய்யும் பட்சத்தில், அவற்றை மிக விரைவாக பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், ஏனைய நாடுகள் தற்போது இந்த தடுப்பூசிகளை பயன்படுத்த ஆரம்பித்துள்ளதினால், அவற்றின் பலன்கள் எவ்வாறு காணப்படுகின்றது என்பதை அறிந்து செயற்படுவது பொருத்தமாக அமையும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன் ஊடாக, கொரோனா தடுப்பூசிகளினால் ஏற்படக்கூடிய பக்கவிளைவுகள் மற்றும் அதன் நன்மைகள் குறித்து அறிந்துக்கொள்ள முடியும் எனவும் வைத்தியர் சுசி பெரேரா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாட்டிற்கு கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொள்வது குறித்து ஆராய்வதற்காக ஒருகுழு மும்முரமாக செயற்பட்டு வருவதாகவும் அவர் கூறுகின்றார்.

சர்வதேச நாடுகள் அவசர தேவைக்காக பயன்படுத்துவதற்காகவும், தொற்றை தடுப்பதற்காகவும் இரண்டு வகையான தடுப்பூசிகளை பயன்படுத்த ஆரம்பித்துள்ளதாக வைத்தியர் குறிப்பிட்டுள்ளார்.

அதனை பெற்றுக்கொள்வதற்கு இலங்கை போன்ற நாடுகளினால் நிதி செலவிடமுடியாது காணப்படுவதால், அதற்கு ஏற்ற விதத்தில் தடுப்புசிகளை விநியோகிப்பதற்கு உலக சுகாதார ஸ்தாபனம் பொறிமுறைகளை தயாரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அந்த பொறிமுறைக்குள் உள்வாங்குவதற்கு, சுகாதார அமைச்சினால் முன்மொழிவுகளை சமர்ப்பிக்க வேண்டுமெனவும் வைத்தியர் சுசி பெரேரா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகளில், களஞ்சியப்படுத்தலானது மிக முக்கிள பகுதியாகும், அதாவது உரிய வெப்பநிலையில் அவைகள் இருக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்..

ஆகவே, அத்தகைய களஞ்சியப்பாதுகாப்பு விடயங்கள் குறித்தும் இப்போதே கவனம் செலுத்த வேண்டுமென சுகாதார அமைச்சின் சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் சுசி பெரேரா தெரிவித்துள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.