கண்டியில் பல இடங்களில் அண்மையில் ஏற்பட்ட நில அதிர்வுகள் தொடர்பான அறிக்கை ஒன்றை, புவிசரிதவியல் மற்றும் சுரங்கத் தொழில் பணிமனையின் நிபுணர்கள் குழு தயாரித்து வருகிறது.
இந்த அறிக்கை எதிர்வரும் 4 திங்களுக்குள் முன்வைக்கப்படும் என்று, அதன் பணிப்பாளர் நாயகம் டி. சஜ்ஜன டி சில்வா தெரிவித்துள்ளார்.
கடந்த சில தினங்களாக கண்டியில் திகன உள்ளிட்ட பகுதிகளில் 2 மெக்னிரியுட் அளவைவிட குறைவான அளவில் நில அதிர்வுகள் பதிவாகின.
இது தொடர்பான முழுமையான விசாரணைகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment