கம்பளை நகரசபைக்குட்பட்ட பகுதியில் கடந்த 24 மணிநேரத்தில் 8 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கோழிக்கடை கொத்தணிமூலமே இவர்களுக்கு வைரஸ் தொற்றியுள்ளது. தொற்றாளர்கள் பொல்கொல்ல மற்றும் பெனிதெனிய ஆகிய பகுதிகளில் உள்ள தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் சுயதனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
கொரோனா வைரஸ் தாக்கத்தின் முதலாவது அலையின்போது கம்பளை பகுதியில் ஓரிருவருக்கு மாத்திரமே வைரஸ் தொற்றியது. எனினும், 2ஆவது அலை ஏற்பட்ட பின்னர் பல இடங்களில் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
குறிப்பாக கம்பளை கோழிக்கடை கொத்தணியின் பின்னர் தொற்றாளர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துவருகின்றது. இதனால் மக்கள் மத்தியிலும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
சுகாதார நடைமுறைகளை முழுமையாக பின்பற்றுமாறும், அநாவசியமாக பொதுவெளியில் நடமாடுவதை தவிர்த்துக்கொள்ளுமாறும் சுகாதார அதிகாரிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.
Post a Comment