மத்திய மாகாணத்தில் தொடர்ந்தும் அதிகரிக்கும் கொரோனா; கண்டி மாவட்டத்திலேயே அதிக தொற்றாளர்கள்.

மத்திய மாகாணத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 718 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.

கண்டி மாவட்டம் மற்றும் நுவரெலியா மாவட்டத்தில் அக்குறணை மற்றும் அம்பகமுவ ஆகிய சுகாதார பிரிவுகளில் 100 ற்கும் மேற்பட்ட தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.

மத்திய மாகாணத்தில் அதிக எண்ணிக்கையிலான கொரோனா தொற்றாளர்கள் கண்டி மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளனர்.

அந்த வகையில் கண்டி மாவடடத்தில் 438 தொற்றாளர்களும் . நுவரெலியா மாவட்டத்தில் 225 தொற்றாளர்களும் , மாத்தளை மாவட்டத்தில் 55 தொற்றாளர்களும் பதிவாகியுள்ளனர்.

அதன் படி, கண்டி மாவட்டத்தில் பதிவான தொற்றாளர்களின் எண்ணிக்கை 400 யும் தாண்டியுள்ளது, அதுபோன்று. நுவரெலியா மாவட்டத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 200 யும் தாண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் கண்டி மாவட்டத்தின் அக்குறணை பிரதேசத்திலும் நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ ஆகிய சுகாதாரப்பிரிவுகளில் அதிக தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த வகையில் அக்குறணை சுகாதாரப்பிரிவில் 108பேரும் அம்பகமுவ சுகாதாரப்பிரிவில் 107 பேரும் பதிவாகியுள்ளனர்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.