கம்பளையில் 400 வர்த்தக நிலையங்கள் பூட்டு: 25 பேர் தனிமைப்படுத்தலில்!

பிஸ்கட் கம்பனி ஒன்றின் கம்பளை பிரதேச விநியோகஸ்தர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதனை தொடர்ந்து பிரதேச சபை பெண் உறுப்பினர் ஒருவர் உட்பட 25 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

தொற்றாளர் ஒருவர் தொழில் நிமித்தமாக தொடர்பை பேணிய கம்பளை உட்பட 5 நகரங்களில் அமைந்துள்ள சுமார் 400 வர்த்தக நிலையங்கள் திங்கட்கிழமை இரவு 6 மணிமுதல் கட்டம் கட்டமாக மூடப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நகருக்குவரும் பொதுமக்களை அவதானமாக இருக்குமாறும் அவர்கள் கேட்டுக்கொள்கின்றனர்

கம்பளை நகரில் திங்கட்கிழமை இரவு மூடப்பட்ட 120 வியாபார நிலையங்களின் உரிமையாளர் ஊழியர்களுக்கான பி.சி.ஆர் பரிசோதனைகள் நாளை (30) கம்பளை தேசிய உரிமைகள் மத்திய நிலையத்தில் மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளமையால் தவறாது அனைவரும் கலந்து கொண்டு ஒத்துழைப்பை வழங்குமாறும் கம்பளை நகர சபையின் பொதுச் சுகாதார அதிகாரிகள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

கம்பளை அட்டபாகையைச் சேர்ந்த 29 வயதுடைய குறித்த நபர் பிஸ்கட் விநியோகஸ்தராவார். இவருக்கு கடந்த 24 ஆம் திகதி பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதனையடுத்து அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டடிருந்த நிலையில், அவருக்கு 27 ஆம் திகதி தொற்று உறுதியாகும் வரையிலான காலப் பகுதியில் அவர் பல்வேறு இடங்களில் நடமாடியுள்ளார். இதன் காரணமாக கம்பளை உடபளாத்த பிரதேச சபை பெண் உறுப்பினர் உட்பட குடும்பத்தினருடனும் இவர் தொடர்பைப் பேணியமையும் தெரிய வந்துள்ளது.

மேலும், மேற்குறிப்பிட்ட தொற்றாளர் தொழில் நிமித்தமாக தொடர்பைப் பேணிய பேராதனை, கெலி ஓயா, வெளிகல்ல கொஸ்ஹின்ன, ஹெட்கானைஆகிய நகரங்களில் அமைந்துள்ள அதிகமான வியாபார நிலையங்களை மூடுவதற்கான ஏற்பாடுகளையும் குறித்த பிரதேசங்களுக்குப் பொறுப்பான சுகாதார அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.