கண்டி மாவட்டத்தில் நேற்று மாத்திரம் 40 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கண்டி மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்கள் குண்டசாலை - 12 பேர், உடபலாத்தை (கம்பளை) - 9 பேர், அக்குரணை - 7 பேர், கங்கவட்டகொரலே - 3 பேர், பம்பரதெனிய - 1 பேர், கண்டி மாநகர சபை - 3 பேர், ஹரிஸ்பத்துவ - 2 பேர், பூஜாப்பிட்டிய - 2 பேர், உடுனுவர - ஒருவர்.
இதற்கமைய கண்டி மாவட்டத்தின் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 991 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன் கண்டி மாவட்டத்தில் இதுவரை ஐந்து கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக கண்டி மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.
Post a Comment