30 ஆயிரத்தை கடந்த கொரோனா – நாட்டின் தற்போதைய நிலைமை என்ன?

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இருவர் உயிரிழந்துள்ளதாக நேற்று இரவு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் இந்த விடயத்தை உறுதிப்படுத்தியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 144 ஆக உயர்வடைந்துள்ளது.

அத்துடன், கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 694 பேர் நேற்றைய நாளில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவ்வாறு தொற்றுக்குள்ளானதாக அடையாளம் காணப்பட்டவர்களில் 651 பேர் பேலியகொடை மீன்சந்தை கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் எனவும், 43 பேர் சிறைச்சாலைகளில் தொற்றுக்கு உள்ளானவர்கள் எனவும் சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்து 72 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றின் இரண்டாவது அலையில் இதுவரை 26 ஆயிரத்து 516 பேர், அடையாளம் காணப்பட்டுள்ளதாக, கொரோனா தொற்றை தடுப்பதற்கான தேசிய செயலணி சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த நிலையில், கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 542 குணமடைந்த நிலையில் நேற்றைய தினம் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆயிரத்து 800 ஆக அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், கொரோனா தொற்றுக்குள்ளான 8 ஆயிரத்து 128 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அத்துடன், கொரோனா தொற்று குறித்த சந்தேகத்தின் அடிப்படையில் 584 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றைக் கண்டறிவதற்காக 9 இலட்சத்து 41 ஆயிரத்து 468 பி.சிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.