தேசிய கல்வியியல் கல்லூரிகளில் கற்கை நெறிகளைப் பூர்த்தி செய்த மாணவர்களுக்குப் பொருத்தமான ஆசிரியர் நியமனங்கள் தொடர்பான தகவல்களை ஒன்லைன் மூலமாகப் பெறும் காலத்தை நீடித்துள்ளதாகக் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, 2016 மற்றும் 2018 ஆண்டுகளில் தேசிய கல்வியியல் கல்லூரிகளில் கற்கை நெறிகளைப் பூர்த்தி செய்த மாணவர்களுக்குப் பொருத்தமான ஆசிரியர் நியமனங் களுக்கான தகவல்களை ஒன்லைன் மூலமாகப் பெற்றுக்கொள்ளக் கல்வி அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
அத்துடன், டிசம்பர் 20 ஆம் திகதி வரை தகவலைப் பெறும் காலத்தை நீடித்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
கல்வி அமைச்சின் வலைத்தளமான www.ncoe.moe.gov.lk ஐ அணுகுவதன் மூலம் பயிற்சியாளர்கள் தங்கள் தகவல்களை உள்ளிடலாம் என்று கல்வி அமைச்சு மேலும் தெரிவிக்கிறது.
Post a Comment