பசில் ராஜபக்ஷவுக்கு SLPP குழுவினர் செய்த செயல்.

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ஏற்றுக்கொண்டு மீண்டும் நாடாளுமன்றத்திற்கு பிரவேசிக்குமாறு முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ஷவிடம், சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் குழு ஒன்று கோரிக்கை விடுத்துள்ளது.

கடிதம் மூலம் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பின் 19ஆம் திருத்தச் சட்டத்தின் மூலமாக இரட்டை பிரஜாவுரிமை கொண்டவர் இலங்கையில் தேர்தலில் போட்டியிட முடியாது என்ற ஏற்பாடு நடைமுறைக்கு வந்தது.

இந்தநிலையில், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ போட்டிருக்கவில்லை.

எவ்வாறு இருப்பினும் அண்மையில் புதிய அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 20 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தில் இரட்டை பிரஜாவுரிமை கொண்டவர்கள் நாடாளுமன்றத்திற்கு பிரவேசிக்க அனுமதி வழங்கப்பட்டது.

இவ்வாறான பின்னணியில் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் அந்த பதவியில் இருந்து விலகி, அதற்கு பசில் ராஜபக்சவை நியமிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இவ்வாறான நிலையிலேயே மீண்டும் நாடாளுமன்றத்திற்கு பிரவேசிக்குமாறு சிறிலங்கா பொதுஜன முன்னணியின் குழு ஒன்று முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.