எழுமாற்றாக முன்னெடுக்கபட்ட PCR பரிசோதனை முடிவுகளில் மூவருக்கு கொரோனா உறுதி!

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் முன்னெடுக்கப்பட்ட எழுமாற்றான பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் மூன்று பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அண்மையில், தம்புள்ளை பகுதியில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில், எழுமாற்றாக பி.சி.ஆர். பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.

இதற்கமைய, தம்புள்ளை மாநகரசபைக்குட்பட்ட பொருளாதார மத்திய நிலையத்தின் பணியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் உள்ளிட்ட 200 பேருக்கு இவ்வாறு பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக நகர சுகாதாரத்துறையினர் தெரிவிக்கின்றனர்.

குறித்த பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகள் இன்று வெளியான நிலையில், தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் மூன்று பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.