நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்றினால் மேலும் ஒருவர் உயிரிழந்த நிலையிலே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இம்புல்கொடை பகுதியைச் சேர்ந்த 63 வயதுடைய ஆண் ஒருவர் மஹரகம புற்றுநோய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
இந்த நிலையில், குறித்த நபருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையின் மூலம் அவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், கொரோனா தொற்றினால் நேற்றைய தினம் மாத்திரம் 5 உயிரிழப்புகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
மாளிகாவத்தை பகுதியைச் சேர்ந்த 68 வயதுடைய பெண் ஒருவரும், பானந்துறை பகுதியைச் சேர்ந்த 80 வயதுடைய ஆண் ஒருவரும், கொழும்பு 11 பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய ஆண் ஒருவரும், களனி பிரதேசத்தைச் சேந்த 45 வயதுடைய ஆண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில், கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 316 பேர் அடையாளம் நேற்றைய தினம் இரவு காணப்பட்டுள்ளனர்.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 350 ஆக அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், நேற்று மாத்திரம் 625 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.
இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் சிகிச்சைபெற்று வந்த 646 பேர் குணமடைந்து நேற்றைய தினம் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கமைய, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 183 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், 523 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், கொரோனா தொற்றுக்குள்ளான 5 ஆயிரத்து 121 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றைக் கண்டறிவதற்காக இதுவரை 6 இலட்சத்து 16 ஆயிரத்து 900 பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment