கல்வி பொது தராதர பத்திர சாதாரண தர பரீட்சை தீர்மானிக்கப்பட்ட திகதியில் நடத்தப்படுமா இல்லையா என்பது தொடர்பில் எதிர்வரும் 10 தினங்களுக்குள் அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இன்று அரச தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் ஜனவரி 18 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையை நடத்துவதற்கு தற்போது உத்தேசிக்கப்பட்டுள்ளது.
Post a Comment