நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 48 ஆக அதிகரித்துள்ளது.
அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றினால் மேலும் இருவர் உயிரிழந்த நிலையிலே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொழும்பு 12 பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய ஆண் ஒருவர். மேலும் மீகோட பகுதியை சேர்ந்த 45 வயது ஆண் ஒருவருமே இவ்வாறு கொரோனா தொற்றால் பலியாகியுள்ளனர்.
Post a Comment