பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் நாளை விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரெரா தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 23 ஆம் திகதி பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் இதன்போது இறுதித் தீர்மானம் எட்டப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பிலான கொரோனா தடுப்பு தேசிய செயலணியின் பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் கல்வி அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
Post a Comment