கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரிப்பு! முழுமையான விபரம்..

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 23 ஆயிரத்து 484 ஆக உயர்வடைந்துள்ளது.

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 496 பேர் நேற்று அடையாளம் காணப்பட்டதை அடுத்து இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

குறித்த அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்குள்ளானோருடன் தொடர்புடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை கொரோனா கொத்தனியுடன் தொடர்புடைய கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 19 ஆயிரத்து 946 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் 12 ஆயிரத்து 793 பேர் இதுவரை குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 346 பேர் குணமடைந்து இன்று வீடுதிரும்பியுள்ளனர்.

இதன்படி, கொரோனா தொற்றில் இருந்து முழுமையாகக் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 17 ஆயிரத்து 2 ஆக உயர்வடைந்துள்ளது.

சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், நாட்டில் கொரோனா தொற்று காரணமாக இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 116 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் ஏழு மரணங்கள் நேற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

இதன்படி கொரோனா தொற்று காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த கொழும்பு 2 பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயதுடைய பெண்ணொருவர் மேலதிக மேலதிக சிகிச்சைகளுக்காக முல்லேரியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் நேற்று உயிரிழந்துள்ளார்.

கொரோனா தொற்று காரணமாக ஏற்பட்ட நிமோனியா தாக்கம் இவரது மரணத்திற்கான காரணம் என உறுதிப்படுத்தப்பட்டிருந்கின்றது.

மேலும் கொத்தட்டுவ பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய ஆணொருவர் கடந்த 27 ஆம் திகதி அவரது வீட்டில் உயிரிழந்துள்ளார்.

நீரிழிவு நோயினால் நீண்ட பாதிக்கப்பட்டிருந்த குறித்த நபர் கொரோனா தொற்றினால் ஏற்பட்ட நிமோனியா தாக்கம் இவரது மரணத்திற்கான காணம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை மொரட்டுவை பகுதியைச் சேர்ந்த 73 வயதுடைய ஆணொருவர் கொரோனா தொற்று காரணமாக ஹோமாகம வைத்தியசாலையில் நேற்று உயிரிழந்துள்ளார்.

அத்துடன் புத்தளம் பகுதியைச் சேர்ந்த 70 வயதுடைய ஆணொருவர் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று உயிரிழந்துள்ளார்.

நீரிழிவு உயர்குருதி அழுத்தம் மற்றும் கொரோனா தொற்றினால் ஏற்பட்ட நிமோனியா தாக்கம் என்பன இவரது மரணத்திற்கான காரணம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அக்குரஸ்ஸ பகுதியைச் சேர்ந்த 51 வயதுடைய பெண்ணொருவர் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த 27 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

சிறுநீரக பாதிப்பு மற்றும் கொரோனா தொற்றினால் ஏற்பட்ட நிமோனியா தாக்கம் என்பன இவரது மரணத்திற்கான காரணம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே கொழும்பு 13 பிரதேசத்தைச் சேர்ந்த 90 வயதுடைய பெண்ணொருவர் கொரோனா தொற்று காரணமாக ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிப்பட்டிருந்த நிலையில் நேற்று உயிரிழந்துள்ளார்.

மேலும் மருதானை பகுதியைச் சேர்ந்த 78 வயதுடைய ஆணொருவர் கடந்த 27 ஆம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.