கண்டி மாவட்டத்தில் முதலாவது கொரோனா மரணம் பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கலஹா பிரதேசத்தை சேர்ந்த 72 வயதுடைய நபர் ஒருவர் பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கும் போது உயிரிழந்ததாக மத்திய மாகாண சுகாதார சேவை திணைக்களம் தெரிவித்துள்ளது.
அந்த நபர் சுகயீனம் காரணமாக தனது மனைவியின் உதவியுடன் பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கும் போதே உயிரிழந்துள்ளதாக பேராதனை வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட பீசீஆர் பரிசோதனையில் அவர் கொரோனா தொற்றுக்குள்ளானமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அந்த நபர் தனது மனைவியுடன் கொலன்னாவையில் உள்ள மகளின் வீட்டிற்கு கடந்த 26ஆம் திகதி சென்றுள்ளார்.
Post a Comment