சிறார்களே தளர்ந்து விடாதீர்கள்!

ஐந்தாம் ஆண்டு புலமை பரீட்சையில் சித்திபெற்ற தம்பி தங்கைகளுக்கு எனது வாழ்த்துக்கள்..

சித்தி பெறாத தம்பி தங்கைகளுக்கும் எனது வாழ்த்துக்கள்.

ஐந்தாம் ஆண்டு புலமை பரீட்சை என்பது ஒரு சாதாரண பரீட்சை இந்தப் பரீட்சை மூலம் பெற்றோர்கள் மற்றும் பிள்ளைகள் மிகுந்த மனதளவில் உளரீதியாக பாதிக்கப்படுகிறார்கள் என்பதே உண்மை.

அன்பின் பெற்றோர்களே! உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள்.

இந்த புலமை பரீட்சை தான் உங்களின் குழந்தையின் திறமையை நிர்ணயிக்கும் என்றில்லை. இந்தக் கட்டம் தான் அவர்களின் கல்வியில் மிகவும் முக்கிய தருணம் என்பதுமில்லை.

ஆகவே மனம் தளர்ந்து விடாதீர்கள். நீங்களும் மனது உடைந்து, கவலையை கூட வெளியே சொல்ல தெரியாத அந்த பிஞ்சு உள்ளங்களின் மனதில் பாதிப்பு அதிகமாகி விடாமல் அவதானம் செலுத்துங்கள்.

ஏனென்றால் அவர்கள் இப்பொழுதுதான் வெற்றி தோல்விகளை உணரும் சந்தர்ப்பத்தை கற்றுக் கொள்ளும் தருணம். இந்தக் கட்டத்தில் இதை மறந்துவிட்டு அடுத்த கட்டத்துக்கு செல்ல அவர்களை உற்சாகப்படுத்துங்கள். அவர்களை கல்வியையே வெறுத்து உடைந்து போகாமல் அவர்களை அடுத்த கட்டத்தை நோக்கி செல்ல தைரியத்தை கொடுங்கள்.

இது ஒரு சாதாரண பரீட்சை வெற்றி தோல்வி சகஜம்

என்பதை புரிய வையுங்கள். அல்லாஹ் நாடியதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதை அவர்களுக்கு தெளிவுபடுத்துங்கள். இதுவும் நன்மைக்கே என்பதை கூறுங்கள்.

நாளை அவர்களும் வீட்டுக்கும் சமூகத்துக்கும் நாட்டுக்கும் ஒரு திறமை உள்ள நற் பிரஜையாக உருவாகுவார்கள் என்பதில் ஐயமில்லை. இன்ஷா அல்லாஹ்.

பாஷிரா ஜுனைடீன்
(ஊடகவியலாளர், எழுத்தாளர், அறிவிப்பாளர், உளவியலாளர்) 

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.