மியன்மார் தேர்தலில் ஆங் சான் சூகியின் கட்சி வெற்றி.

மியன்மார் நாடாளுமன்றத் தேர்தலில் ஆங் சான் சூகி தலைமையிலான ஆளும் ஜனநாயகத்துக்கான தேசிய லீக் (National League for Democracy (NLD) ) வெற்றிபெற்றுள்ளதாக அக்கட்சி இன்று தெரிவித்துள்ளது.

மியன்மாரில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. 2011 ஆம் ஆண்டு இராணுவ ஆட்சியிலிருந்து மியன்மார் விடுபட்ட பின்னர் அந்நாட்டில் நடைபெற்ற இரண்டாவது தேர்தல் இதுவாகும்.

மில்லியன் கணக்கான மக்கள் இத்தேர்தலில் வாக்களிப்பதற்காக பல மணித்தியாலங்கள் வரிசைகளில் காத்திருந்தனர்.

என்.எல்.டி கட்சியின் பேச்சாளர் மியோ நியுன்ட் ஏ.எவ்.பியிடம் பேசுகையில், கட்சியின் தேர்தல் முகவர்கள் அளித்த தகவல் அடிப்படையில் தமது கட்சி பாரிய வெற்றியீட்டியுள்ளதாகத் தெரிவித்தார்

‘2015 ஆம் ஆண்டு நாம் பெற்ற 390 ஆசனங்களைவிட இம்முறை அதிக எண்ணிக்கையான ஆசனங்களை பெறுவதற்கு நாம் எதிர்பார்க்கிறோம்’ எனவும் அவர் கூறியுள்ளார்.

நோபல் பரிசு வென்ற ஆங் சான் சூகி (Aung San Suu Kyi) , மியன்மாரில் ஒரு ஹிரோயினாக நீடிக்கின்ற போதிலும், ரோஹிங்யா பிரச்சினையைக் கையாண்ட விதம் மற்றும் சிறுபான்மையின மக்கள் வசிக்கும் பிராந்தியங்களில் பரவிய விரக்தி காரணமாக, உலகளாவிய ரீதியில் அவரின் புகழ் சிதைந்துள்ளது என ஏ.எவ்.பி. சுட்டிக்காட்டியள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.