மேல் மாகாணத்திலும் ஏனைய பகுதிகளிலும் நாளை ஊரடங்கு நீக்கப்பட்ட பின் தொடர்ந்து தனிமைப்படுத்தப்படவுள்ள பிரதேசங்கள் விபரம்

மேல் மாகாணத்திலும் ஏனைய பிரதேசங்களிலும் பிறப்பிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு நாளை திங்கட்கிழமை காலை 5 மணியுடன் நீக்கப்படவுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

எனினும் கொழும்பு, கம்பஹா, களுததுறை, குருணாகல், கோகாலை மாவட்டங்களில் பல பகுதிகள் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்படவுள்ள இடங்கள்:

கொழும்பு மாவட்டத்தில்:
மட்டக்குளி, முகத்துவாரம் (மோதர), புளூமெண்டால், கொட்டாஞ்சேனை, கிராண்ட்பாஸ், கரையோரப் பொலிஸ் பிரிவு, பாபர் வீதி, மாளிகாவத்தை, தெமட்டகொடை, வெல்லம்பிட்டி, வாழைத்தோட்டம், பொரளை பொலிஸ் பிரதேசங்கள்.

கம்பஹா மாவட்டத்தில்: 
பேலியகொடை, வத்தளை, கடவத்தை, ராகமை, நீர்கொழும்பு, பமுணுகம, ஜா-எல, சப்புகஸ்கந்த.

களுத்துறை மாவட்டத்தில்:
ஹொரணை, இங்கிரிய, வேகந்த- மேறகு கிராம சேவகர் பிரிவு,

குருணாகல் மாவட்டத்தில்:
குருணாகல் மாநகரசபைப் பிரதேசம், குளியாப்பிட்டிய.

கேகாலை மாவட்டத்தில் :
மாவனெல்லை, ருவான்வெல்லை.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.