சிறையில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள அதிரடி தீர்மானம்!

கொவிட் 19 தொற்று நிலைமை காரணமாக பொரளை மற்றும் மெகசின் சிறைச்சாலைகளில் இருந்து பாராளுமன்றத்திற்கு வரும் பாராளுமன்ற உறுப்பினர்களை பாராளுமன்ற அமர்வுகளுக்காக அழைக்காமல் இருக்க பாராளுமன்ற செயற்பாடுகள் தொடர்பான செயற்குழு தீர்மானித்துள்ளது.

அதன்படி, மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்தி குழுவின் தலைவர் மற்றும் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவருமான சிவனேசன் சந்திரகாந்த், அனைத்து இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீன் மற்றும் இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர ஆகியோதை பாராளுமன்ற கூட்டங்களுக்காக அழைக்காமல் இருக்க பாராளுமன்ற படைக்கள சேவிதர் நரேந்திர பெர்ணான்டோ தெரிவித்தார்.

எவ்வாறாயினும், பாராளுமன்றில் வாக்கெடுப்பு ஒன்று இடம்பெறும் சந்தர்ப்பத்தில் சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைவாக பாதுகாப்பு நடைமுறைகளை கடைபிடித்து குறித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்திற்கு அழைத்து வரப்படுவார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.