இராணுவத்தளபதி விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

கொரோனா வைரஸ் பரவல் தொடர்பான தகவல்களை பொது மக்களிடம் மறைத்து செயற்பட வேண்டிய தேவை கிடையாது என இராணுவத்தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி, சுகாதார அமைச்சர் மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஆகியோரின் வழிகாட்டுதல்களுக்கமைய நாட்டில் கொரேனா தொற்றினை கட்டுப்படுத்துவதற்கு சிறந்த முறையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் ராணுவத்தளபதி ஷவேந்திர சில்வா இதனை கூறியுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“கொரோனா வைரஸ் பரவல் தொடர்பான தகவல்களை பொது மக்களிடம் மறைத்து செயற்பட வேண்டிய தேவை கிடையாது. ஜனாதிபதி சுகாதார அமைச்சர் மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஆகியோரின் ஆலோசனைகளுக்கமைய கொரேனா தொற்றினை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நாட்டு மக்களை ஏமாற்ற வேண்டிய தேவை அரசாங்கத்திற்கு கிடையாது. நேற்றைய நாளில் கொழும்புமாவட்டத்தில் 271 பேரும் கம்பஹா மாவட்டத்தில் 46 பேரும், களுத்துறை மாவட்டத்தில்12 பேரும், கேகாலை மாவட்டத்தில் 10 பேரும், காலி மாவட்டத்தில் 4 பேரும், பொலனறுவை மாவட்டத்தில் இருவரும், புத்தளம், இரத்தினபுரி, ஹம்பந்தோட்டை மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவரும் இவ்வாறு கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில்,கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களிலே அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்படி கொழும்பு மாவட்டத்தில் தொற்றுக்குள்ளான 271 பேரில் 230 பேர் 230 பேர் கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் இருந்து அடையாளங் காணப்பட்டுள்ளனர்.

ஏனையவர்கள் கொழும்பு வடக்கு பகுதியை சேர்ந்தவர்கள்” என இராணுவத்தளபதி ஷவேந்திர சில்வா மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.