இலங்கையில் இன்று இரண்டு கொரோனா மரணங்கள் பதிவானது.

இலங்கையில் இன்றைய தினம் இரண்டு கொரோனா மரணங்கள் பதிவானதாக அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. 

கொட்டாஞ்சேனை - ஜம்பட்டாவீதியைச் சேர்ந்த 68 வயதான பெண் ஒருவர் அவரது வீட்டில் உயிரிழந்த நிலையில் மரண பரிசோதனையின் போது மேற்கொள்ளப்பட்ட பீசீஆர் பரிசோதனையில் அவருக்கு கொவிட்19 தொற்று இருந்தமை உறுதி செய்யப்பட்டது.

கடந்த 1ம் திகதி இந்தப் பெண் கொவிட்19 நோயால் ஏற்பட்ட நிமோனியாவினால் உயிரிழந்ததாக அரச தகவல் திணைக்களத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மரணத்துடன் இலங்கையில் கொவிட்19 தொற்றினால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 22 ஆக பதிவானதாக அரச தகவல் திணைக்களம் இன்று பகல் 2.25 மணியளவில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் இலங்கையில் 23 ஆவது கொரோனா மரணம் பதிவாகியுள்ளதாக அரச தகவல் திணைக்களம் இன்று மாலை 7 மணியளவில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கொழும்பு 15 பிரதேசத்தை சேர்ந்த 61 வயதுடைய பெண் ஒருவர் நேற்று (02) அவரது வீட்டில் உயிரிழந்த நிலையில் பிரேத பரிசோதனையின் போது அவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த பெண் காய்ச்சல், இருமல், தொண்டை வலி ஆகிய நோய்களினால் பீடிக்கப்பட்டிருந்ததாக பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

எவ்வாறாயினும், சுவாசப்பை கோளாறு காரணமாவே உயிரிழந்துள்ளதாக இனங்காணப்பட்டுள்ளது.

இந்த மரணம் இலங்கையில் 23 ஆவது கொரோனா மரணமாக பதிவாகியுள்ளதாக அரச தகவல் திணைக்களம் இன்று மாலை 7 மணியளவில் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.